தீக்குச்சி
13 மே 2008 7 மறுமொழிகள்
in ஹைக்கூ
இவள் என்ன கண்ணகியோ?
ஒரு முறை உரசியதற்கே
பற்றி எரிக்கிறாள்.
மானமுள்ள தீக்குச்சி.
ஒரு முறை உரசியதற்கே
பற்றி எரிக்கிறாள்.
மானமுள்ள தீக்குச்சி.
துளிப்பா – 1
13 மே 2008 8 மறுமொழிகள்
சாதிகள் இல்லையடி
பாப்பா!
எல்லா மக்களும்
மேன்மக்களே!
உத்தப்புரம்,பாப்பாபட்டி,கீரிப்பட்டி.
~~~
எங்கள் வீட்டு நீருக்கும்
நிறமுண்டு
சாயப்பட்டறைக் கழிவுகள்.
நிறமுண்டு
சாயப்பட்டறைக் கழிவுகள்.
~~~
குஞ்சு மிதித்து
முடமான கோழிகள்
முதியோர் இலலம்.
முடமான கோழிகள்
முதியோர் இலலம்.
~~~
கோழி மிதித்து
முடமான குஞ்சுகள்
குழந்தைகள் காப்பகம்.
முடமான குஞ்சுகள்
குழந்தைகள் காப்பகம்.
~~~
நவம்பர் 14
குழந்தைகள் தின விழா
சிவகாசியில் கோலாகலம்.
குழந்தைகள் தின விழா
சிவகாசியில் கோலாகலம்.
~~~
நகரெங்கும் பாலம்
அமைப்போம்.
அந்த காண்டிராக்டில்
ஓர் ஊழல் செய்வோம்.
அரசியல்வாதி.
அமைப்போம்.
அந்த காண்டிராக்டில்
ஓர் ஊழல் செய்வோம்.
அரசியல்வாதி.
~~~


கருத்து சொல்றாங்கோ!