நிழலான நிஜங்கள்
10 அக் 2008 13 மறுமொழிகள்
in கவிதைகள்
நிஜம்
நமக்குள் விளக்கமுடியாத
ஒரு உறவிருப்பதும்
நிஜம்.
அதீதமாய் நானுன்னை
நேசித்ததும் நிஜம்
அதை நிஜமென நீ
நம்பமறுத்ததும் நிஜம்.
விருப்பமில்லாமலே
நீயென்னை வீசியெறிந்ததும்
நிஜம்.
நீயும் நீ சார்ந்தவைகள்தான்
என் உலகம் என்பதும் நிஜம்,
அவையின்றி சுகவீனமாய்
நான் இருப்பதும் நிஜம்.
நம் உறவு முறிந்த
ஒரு கருப்பு நாளில்
கதறியழுத என் கண்களில்
உனக்கான் ஈரம் இன்னும்
மிச்சமிருப்பதும் நிஜம்.
நீ விலகிச்செல்லும்
ஒவ்வொரு தருணமும்
நான் மரணத்தை
நெருங்கிக்கொண்டுருப்பதும்
நிஜம்.
உயிர் பிரியும்வரை நியென்
உடனிருப்பாய் என நான்
நம்பியதும் நிஜம்,
அது பொய்யென என்
உயிர் கிழித்ததும் நிஜம்.
நீ என்னை ஏற்கும்
திருநாள் காணும் வரை
காலன் அவன் கரங்களில்
சிறைப்பட மறுக்கிறதடி
என் மனம்.

அக் 14, 2008 @ 17:10:31
அருமையான வரிகள்!
- நினா.கண்ணன்
அக் 14, 2008 @ 17:11:02
போனால் போகட்டு போட… என்ற பாடல் இந்த கவிதைக்கு ஆறுதல் சொல்லட்டும்
அக் 14, 2008 @ 17:11:43
கதறியழுத என் கண்களில்
உனக்கான் ஈரம் இன்னும்
மிச்சமிருப்பதும் நிஜம்.
காதல் கவிதைகளில் பிரிவின் சோகம் சொல்லும் கவிகளே அதிகம் போலும் ..
- பூங்குழலி
அக் 14, 2008 @ 17:12:19
அன்பின் பூங்குழலி
காதலின் பிரிவு தானே
கவிதையை தரும்!
காதலில் வென்றவர்கள்
மனதில் கவிதை வருமா?
அழகான கவிதை தந்த சங்கர்
அழகான வெற்றி பெற வாழ்த்துகின்றேன்
அன்புடன் இளங்கோ
அக் 14, 2008 @ 17:13:16
அருமையான கவிதை ..அன்புடன் சங்கர் அவர்களே ..
வாழ்த்துக்கள் ..
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு …
அக் 14, 2008 @ 18:01:49
பிரிவால் மரணத்திற்குத் துணிவது குறைந்த கால உணர்வுகள். அந்தக் காலத்தைத் தாண்டியதும் நாம் அன்று இறந்திருந்தால் வாழ்க்கை அர்த்தப் படாமல் போயிருந்திருக்குமே என்று
தோன்றும்.
உங்கள் கவிதை பிரிவின் குரூரத்தை வெகு அழகாக சொல்கிறது.
அக் 24, 2008 @ 14:18:38
“காதலின் பிரிவு தானே
கவிதையை தரும்!
காதலில் வென்றவர்கள்
மனதில் கவிதை வருமா? ”
தவறு….Mr.இளங்கோ..காதலின்..வெற்றியும்..கவிதைதரும்…வாருங்கள்..
uumm.wordpress.com
கவிதை..வெகு..அருமை..சங்கர்..வழ்த்துக்கள்.
நவ 13, 2008 @ 13:34:37
உலகத்தில் நல்ல விஷயங்கள் அதிகம் உள்ளன காதலை தவிர
அதில் உங்கள் கவணம் திரும்ப வாழ்த்துக்கள்!!!
நவ 14, 2008 @ 09:09:40
ஆஹா! என்ன அட்டகாசமான வரிகள்!!!
படிப்பவர்கள் மனதை உருகச்செய்யும் வரிகள்…
காலம் தான் உன் புண்பட்ட மனதிற்கு ஆறுதல் கூற வேண்டும்…
யாரென நான் அறிந்தால், கண்டு பொறாமைப்பட தோன்றும்…
நவ 26, 2008 @ 20:49:45
shangaran antha “Nijam” appidingara varthiya kadaisila mattum use pannirundha innum nalla irunthirukkumkiradhu adiyenudaiya thazmaiyana karuthu. Neraiya tharava “Nijam” repeat aagaradhala konjam flow udaikkudhunnu oru feeling.
BUT it is a great piece of work. hats off.
Dont worry june pona july kaathu !!!
Feb 14, 2009 @ 16:24:54
k
Dec 18, 2009 @ 12:13:16
ujir piriyum varai Nee en
uadaniruppathu ena naan
Nampiyathu Nijam
Athu Poiyena en Ujir Kilinthathum
Nijam
Rompa adputhama Varikal
Very Nice
மார் 21, 2010 @ 17:04:40
ஆம் கவிதைகள் நன்றாக உள்ளது மேலும் வளர என் வாழ்த்துக்கள் சுவிஸ் விமலன்