shangaran எழுதியவை | April 1, 2010

பிரிவின் பயணம்

எதுவும் மாறவில்லை

பின் இரவில் கசியும்
இன்னிசையில்,

ப‌றிமாறிக்கொண்ட
க‌டைசி முத்தத்தின்
ருசியில்,

மதுக்கோப்பையின்
ஒரு கடைசித் துளியில்,

ஒரு பொன்நிறவு
பொழுதில் நிகழ்ந்த,
புணர்ச்சியின்
உச்சத்தில்முனகிய
மெல்லிசையில்,

என் உயிர் வலித்த
உன்மத்த நிலையில்,

பித்தனைப்போல்
உன் பிம்பம்
தேடி அலைகிறேன்

ம்..ம்..ம்
எதுவுமே மாறவில்லை
மிக அரிதாகவே
நிகழும் நம்
சந்திப்புகள் உட்பட…

ம்..ம்..ம்
நீ வ‌ருவ‌த‌ற்கான‌ எந்த
முகாந்திரமும் தெரிவ‌தாய்
இல்லை.

ஒரு
அர‌வ‌ம‌ற்ற‌ ந‌டுநிசியின்
நில‌வொளியில்,

இல‌க்கில்லாம‌ல்,
திசைய‌றியாம‌ல்
வெறுமையாய் தொட‌ர்கிற‌து
என் ப‌ய‌ணம்
உன் நினைவுகளைச்
சுமந்தபடி.


மறுவினைகள்

  1. அருமை அருமை கவிதை அருமை சங்கர

    கடைசி முத்தத்தின் ருசி
    மதுக்கோப்பையின் கடைசித்துளி
    புணரும்பொழுது – உச்சத்தில் முனகிய மெல்லிசை
    அடடா என்ன கற்பனை என்ன கற்பனை

    நன்று நன்றி சங்க்ர
    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

  2. நல்ல கவிதை
    தொடரட்டும்

  3. அன்பின் சங்கரன்,

    >> இல‌க்கில்லாம‌ல்,
    திசைய‌றியாம‌ல்
    வெறுமையாய் தொட‌ர்கிற‌து
    என் ப‌ய‌ணம்
    உன் நினைவுகளைச்
    சுமந்தபடி. >>

    அருமையான வார்த்தைகளைச் சுமக்கும் கவிதைக் கப்பல்.

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    சக்தி

  4. super.

  5. காதலும் காமமும் நிறைந்த வரிகள்.
    இவை வரிகளல்ல, நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளங்கள்.
    தொட‌ர்ந்து எழுத‌வும்…

    நட்புடன்,
    காமினி

  6. friends thanks a lot ur comments/wishes.

  7. Nice lines …

  8. இல‌க்கில்லாம‌ல்,
    திசைய‌றியாம‌ல்
    வெறுமையாய் தொட‌ர்கிற‌து
    என் ப‌ய‌ணம்
    உன் நினைவுகளைச்
    சுமந்தபடி.
    —–> என்னை ஈர்த்த வரிகள்……வாழ்த்துக்கள் தோழா……..

    இது என் வரிகள்………
    “உன்னை விட நானே அதிகமாய் நேசிக்கப்பட்டேன்…உன்னை கொண்டு கவிதை நிரப்பிய தாளினால்…….

  9. Thalai welcome back

    ummai roomla thaniya irukavittadhu thappumvoi

    neer yenna senjeerunnu umma kavithai varigal solluthu

    well its really awesome and i can feel your pain…

    rgds,
    S

  10. after a loooooooooooooooooooong time return to blog with baaaaaaaaaaaaang

    great but vist to your home regularly pa?

  11. Hi Vinod,

    Thnx a lot for comments & encouragement.

    cheers,
    Shangaran


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்