மோகமுள்

விழிவாசல் திறந்த‌ பின்
மூச்சின் வெப்பத்தில்
உருகும் ஆசை,
உதடு ரேகைக்குள்
ஒளிந்து விளையாடும்!

திரண்ட நின்மார்பில்
மனம் சாய்த்துத்
துவங்கும் காதல்,

உந்திச்சுழி கூட்டும்
உன்மத்தத்தில்
விரைப்பேறும் என்னம்பு
குறும்போடு நின் குறிபுகும்!

உச்சத்தில் உயிர் முயங்கி
வெளியேறும் உயிரணுக்கள்
நின் பாதகமலங்களில்
சரணடையும்
என்காதல் அர்ப்பணம்!
என்காமம் சமர்ப்பணம்!

Advertisements

டிவிட்டர் சிந்தனைகள் – 2013

 • இந்திய கலாச்சாரம் குறித்து அறச்சீற்றம் கொள்ப‌வர்கள் ,பாஞ்சாலி  ஐந்து பேருக்கு மனைவியாய் வாழ்ந்தாள் என்று நினைவுகொள்ளவும்…
 • இச்சையை இனிமையாய் சொன்னால் காதலாம்… கொச்சையாய் சொன்னால் காமமாம்….
 • இல்வாழ்க்கை சிறக்க ILLEGAL activities கூடா.
 • Run Run even if you win… Run until you rest in ம‌ண்… # வாழ்க்கை நிதர்சனங்கள்
 • நோக்கும் விழிகள் அறியா அவள் அடுத்தவன் தோழியென்று #சைட் சைக்காலஜி
 • பெண்ணின் மாராப்பு ஆணின் மார்புக்கு ஆப்பு
 • உள்ளத்தின் உள்காயங்களை செப்பனிடுகையில், வலியெங்கும் உன்பெயர்தானடி #தோழிமார் சரித்திரம்
 • தந்தை தன் குழந்தைக்கு தரும் ஆகச்சிறந்த பரிசு – தாத்தா பாட்டி

 • வாலிபத்தில் பணத்தை தேடி அலையும் மனிதன் வயோதிகத்தில் மனதை தேடி அலைகிறான்.
 • நல்ல கல்வி உச்சம் தரும் நல்ல கலவி உன்மத்தம் தரும்
 • வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வரும் பொறுப்பு, அயர்ச்சியை தருவது எனக்குமட்டும் தானா?
 • காயமே இது பொய்யடா, பெறும் காற்றடைத்த பையடா.. Lays packet மாதிரி
 • நட்புக்குள், பால்யத்தில் இல்லாத பாகுபாடு, திருமணம் ஆனதும் எங்கேருந்துதான் வருதுன்னே தெரியல.
 • ஒத்த பொண்டாட்டி கட்டின இராமன் தான்யா காட்டுக்கு போனான், ஆயிரம் பொண்டாட்டி கட்டின தசரதன் போகலையே.. #வாட் எ பிட்டி வகையறாக்கள்
 • பாலியல் வறட்சி கற்பழிப்புக்கும், கற்பனை வறட்சி கலையழிப்புக்கும் வித்திடுகிறது.

டிவிட்டர் சிந்தனைகள் – 2012

 • Consultantகும், Architectக்கும் என்ன வித்தியாசம்னா, Consulatantவாயாலே முழம் போடுவான் Architect செயல்ல காட்டுவான் # மென்பொருள் தத்துவம்.
 • முன்னாள் தோழிக்கு டியர்னு மெசேஜ்பண்னா, buddy-னு reply பண்றா. இதன் உளவியல் என்ன?
 • பணம் பலம்கொண்டு, கட்சிகள் பல நின்று, ஓட்டுகள் பல வாங்கி, புவி ஆள பிறந்தாயடா # மக்களாட்சி
 • யானை பலம்கொண்டு சேனை பல வென்று புவி ஆள பிறந்தாயடா    # மன்னராட்சி
 • திராபையான ஆட்களை தவிர்க்க இயலாத பட்சத்தில் ஒருவித அலுப்பும் அயர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது.
 • பணம் எனும் இனம் மட்டும் எல்லோருக்கும் பிடித்ததாய் (பொதுவாய்) இருக்கிறது.
 • இச்சையை சொன்னால் லஜ்ஜை இல்லாதவன் என்கிறார்கள்.
 • அன்பின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறையே உச்சம்.
 • மனதில் பட்டதை அமைதியாகச் சொன்னால் மொக்கை என்கிறார்கள், கோபமாய் சொன்னால் ஆணவம் என்கிறார்கள்.
 • வாழ்க்கை பற்றிய புரிதல்கள் சில நேரங்களில் அபத்தமாகவே படுகிறது.
 • கா.மு: தோழி பெண்தோழியாகிறாள்; கா.பி: பெண்தோழி தோழியாகிறாள்# வாழ்க்கை ஒரு வட்டம்டா…
 • வயது ஆக ஆக குழந்தைதனத்தையே விரும்புகிறதது மனம்.

 

டிவிட்டர் சிந்தனைகள் – 2010

1. சூன்யம் என்றானபின் உயிரும் ஓர் உபரிதான்.

2. சொல்லாத காதலெல்லாம் சொர்கத்தில் சேராதாம்;
அந்த‌க்கவலை எனக்கில்லையென்றாலும்;
என் காதல் சொர்க்கம் சேர‌
நான் வாழ்வதென்னவோ நரகத்தில்தான்…

மெளனத்தின் பேரோலம்

Image

நேசிப்பவளை மறப்பதும்/மறுப்பதும்
சாத்தியமில்லா ஒன்று,
என் எல்லை எதுவென்று தெரிந்தே
தள்ளிவைத்திருக்கிறாய் …

அமமணமாய் திரியும் உண்மைகளுக்கு
ஆசை ஆசையாய் ஆடை தைக்கிறாய்,
தைத்த ஆடைக்கு என் பெயர் சூட்டியே
அழகும் பார்க்கிறாய் …

சமயங்களில் முறைக்கிறாய்
முன்பின் தெரியாததுபோல் முழிக்கிறாய்
கேட்டால் அன்பை பேராழிக்குள் வைத்து
வழி மறந்தேன் என விழிவிரிய சிரிக்கிறாய் …

பசித்தும் புசிக்க முடியா வலியில் நான் …

உன்னை தூஷிப்பது
என் தொழில்யென சபிக்கிறாய்
உயிர் குடித்து உண்டிப்புணரும்
மிருகமென்கிறாய்

புரிந்துகொள்வ‌தே இல்லையென
புகார் அளிக்கிறாய்
என்ன சொன்னாலும்
மெய்யதிர குதிக்கிறாய் …

என் தரப்பு நியாயங்களை நிராகரிக்கிறாய்
நிதர்சனம் புரியாமலே என்விருப்பத்தை
விஷமென்கிறாய்…

உள்ளதின் உள்காயத்தில்
உன்பெயரெழுதி
நிரந்தரமாய் தண்டிப்பேன்
என மிரட்டுகிறாய்

தள்ளியிருப்பதற்கு
தன்னிலை விளக்கம் கேட்கிறாய்,
ஆனால் என்னிலை விளக்கினால்
குரல்வளை நெரிக்கிறாய் ..

ஆண்டுகள் பலகடந்தாலும்
என் அன்பிற்கு அமிலம்
ஊற்றியே அழிக்கிறாய் ..

என் மொழி புரியாதென்கிறாய்
என் மெளன‌த்தை மொழிபெயர்த்தால்
குய்யோ முறோவென குதிக்கிறாய்…

என்ன சொன்னாலும்
ஏற்புடையதாய் இல்லையென்கிறாய்..

என்செய்வேன் சகி
நான்னென்ன அனுமானா
மார்கிழித்து உன்முகம் காட்ட..

என்னுள் நீக்கமற நிறைந்திருக்கும்
உன் நினைவுகளை புணர்ந்தபடி
பொழுதைகழிப்பதைவிட
வேறு வழில்லையெனக்கு …

மார்ப்பொடிந்த என் மரக்கிளையில்
வந்தமரும் பறவை(கள்) குறித்து
உவகைகொள்வதும் கவலைகொள்வதும்
நான் மட்டுமே அறிந்தத அந்தரங்கம் ..

என் அன்பே புரியாத உனக்கு
என் ஆழ்மனதின் படிம‌ங்களை
படித்து காட்டமுடியா
இயலாமையில் நான் …

ரகசிய சிநேகிதிக்கு – 1

ஒரு கன்னத்தில் அறைந்தாய்
மறுகன்னத்தைக் காட்டினேன்
மகிழ்ச்சியோடு …
ஒரு கன்னத்தில் முத்தமிட்டாய்
மறுகன்னத்தைக் காட்டினேன்
மறுப்பேதும் சொல்லாமல் …
அன்பே ஆத்திரமோ,
அரவணைக்க “நீதான்டாஎல்லாமே” என்றாய்.
திட்டுக்கள் கெஞ்சல்களாய்,
கெஞ்சல்கள் கொஞ்சல்களாய்,
கொஞ்சல்கள் சில்மிஷங்கள்களாய்
உருமாறி
ஒர் அழகியபுணர்தலில் முடிந்தது.