நானும் ஆத்திகனானேன்

க‌டவுள் நம்பிக்கையில்லா நாத்திகன் நான்,
மதம் என்னும் மதம் பிடித்து அலைபவர்களை
வெறுப்பவன் நான்.

உன்னை கண்ட நாள் முதல் எனக்கும் காதல் மதம் பிடித்தது,
மனதுக்குள் ஏதோ ஒர் ஆனந்தம் கடவுள் பார்த்த பக்தன் போல,
அன்றே, நீ என் காதல் கடவுள் ஆனாய்,
நானும் ஆத்திகனானேன்.

Advertisements

நீ ம‌ட்டுமே வேண்டும்

Hug 

நீ, என் காதலியாக வேண்டும்,
நான் உன் துணையாக வேண்டும்,

நீ, என் உயிராக‌ வேண்டும்,
நான் உன் மெய்யாக வேண்டும், 

நீ, என் தாயாக வேண்டும்,
நான் உன் சேயாக வேண்டும்,

ஏழேழு ஜென்ம‌த்திற்கும் நீ வேண்டும்,
நீ ம‌ட்டுமே வேண்டும் ஏதோ ஒரு உறவாக.

பேச்சிலர் வாழ்க்கை

பெற்றோரை விட்டு பிரிந்து இருப்ப‌வ‌ன்,
விடுமுறை நாட்க‌ளில் த‌ன் வீட்டிற்கே,
விருந்தாளியாய் செல்லும் வீர‌ன் இவ‌ன்.

தின‌ம் ஒரு உணவு விடுதி,
அடிக்க‌டி இடம்மாறும் வசிப்பிடம்,
வார‌ இறுதி நாட்க‌ளில் சோம்பிக்கிடப்ப‌தும், சுற்றித்திரிவ‌தும்,
இவ‌ன‌து பொழுதுபோக்கு.

சுருங்க‌ச் சொன்னால் இவ‌னொரு
நாடோடி மன்ன‌ன் திரும‌ணமாகும் வ‌ரை.

இணை(யா)கோடுகள்

Track 

நான் உன் மீது காதல் கொண்டேண்
நீ என் மீது நட்பு கொண்டாய்,

சேர்ந்து வாழலாம் வா என்றேன் காதலர்களாக
சேர்ந்து செல்லலாம் வா என்றாய் நண்பர்களாக,

ஆம், இணைகோடுகள் ஒருபோதும் சேர்வதேயில்லை,
அது போலத்தான் நாமும்.

புது வருடம்

வாழ்துக்க‌ளுடன் தொட‌ங்கி, இரங்கலுடன் முடியும்
உன் வாழ்க்கை உன்ன‌த‌மான‌து.

உன்னை வ‌ரவேற்க‌த்தான் எத்துணை,
ஆர‌வாரம், ம‌கிழ்ச்சிக‌ள், வாழ்த்துக்க‌ள், கேளிக்கைக‌ள்.

பிர‌ம்மன் உன‌க்கு அளித்த‌ ஆயுட்கால‌ம் 12 மாத‌ங்க‌ள்,
உல‌க‌த்தில் உன் வாழ்நாளை முழுமை வாழ்வ‌து நீ ம‌ட்டும் தான்.

நீ பிற‌க்கும்போதே, உன‌க்கான‌ க‌டைசி நாளும் எழுத‌ப்பட்டுவிடுகிற‌து,
நி என்ன‌ எம‌னுக்கு அப்பாற்ப‌ட்ட‌வ‌னோ?

12 மாதங்களில் பல பருவ நிலைகளை தரும்
உன்னை ரசிக்காமல் என்ன செய்வது?

கால‌த்தேவ‌னின் செல்லக்குழந்தை நி,யாருக்கும்
காத்திறாம‌ல் காற்றோடு க‌ரைந்து விடுகிறாய்.

உன்னை வைத்துத்தான் எங்க‌ளின் பிறந்த‌நாளும்
இறந்தநாளும் நினைவு கொள்ளப்ப‌டுகிறது, எனவே,
உன் ஒவ்வொரு நொடியும் சுவாசிக்க‌ப‌ட வேண்டிய‌ சொர்க‌ம்.

எங்க‌ளோடு ஒன்றாக‌ க‌லந்து விட்ட‌ உன்னை வ‌ர‌வேற்கிறோம்,
புத்தாண்டே வ‌ருக‌, வ‌ள‌ங்க‌ள் ப‌ல‌ புரிக‌.