முத்த‌ம்

 Lips kissing

அழகான கவிதை போன்றது
உன் இதழ்கள்,
வாசிக்கும் வாசகனாக நான்.

புன்ன‌கை பூ பூக்கும்
பூந்தோட்ட‌ம் உன் இதழ்கள்,
தேன் குடிக்கும் வ‌ண்டாக‌ நான்.

இன்னிசை த‌ரும் வீணை
உன் இதழ்கள்,
இத‌ழ் மேவும் கலைஞாக‌ நான்.

ந‌ம் காத‌ல் யுத்த‌த்தில்
இத‌ழ்க‌ளே போர்க்க‌ளம்,
முத்த‌ங்க‌ளே ஆயுத‌ம்.

உயிர் உண‌ர்ந்த‌ த‌ருண‌ம் அது,
ஓர் அந்திமாலைப் பொழுதில்
காத‌ல் சொன்ன‌ முத‌ல் நொடியும்,
நீ கொடுத்த‌ முத‌ல் முத்த‌மும்.

எனை, நீ பிரிந்தாலும்
என் ஒவ்வொரு இத‌ய‌த்துடிப்பையும்,
உன் நினைவுக‌ளே முத்தமிடுகின்ற‌து.

Advertisements

அழகுச் சித்திரமே!

 Love art

என் நித்திரை க‌லைத்த‌ சித்திரமே,
பிரிவால் எனை வாட்டாதே நித்த‌முமே,
உனை நிழ‌லாய் நான் தொட‌ர்வேன் அனுதின‌மே,
நம்‌ காதலுக்கு உன் இத‌ய‌ம்தான் புக‌லிட‌மே,
அதுவே, என் உயிர் உற‌ங்கும் உறைவிட‌மே.

ஊடல்

Sad girl 

நாம் காதல் செய்த தருணங்களை விட,
ஊடல் கொண்ட தருணங்களே அதிகம்.

சண்டையிடுவதும் பின் சமாதானம் செய்வதும்
என் வாடிக்கை என்பாய்,
மர‌ண த‌ண்டனையாய்‌ உன் மெளனங்கள் எனை தாக்கும்போது
எப்படி புரிய‌ வைப்பேன் என் உயிர் நீ என்று.

எத்துனை முறை, நீ என்னை நிராக‌ரித்தாலும்,
ஓயாது என் காதல்,
க‌ரை தொடும் அலை போல.

உன் நினைவுக‌ள் இன்றி வாழ்வ‌தே கொடிது,
அதை விடக்கொடிது நீ இன்றி வாழ்வ‌து.

ஊடல் இல்லா காத‌லும்
கூட‌ல் இல்லா காத‌லும் காத‌லன்று,
ந‌ம‌க்கும் இது விதிவில‌க்க‌ன்று.

என் நினைவானவள்

Sneha 

அழகான கவிதை எழுத நினைக்கும் போதெல்லாம்,
உன் பெயரை ம்ட்டுமே எழுதுகிறேன்,

அழகான ஓவியம் வரைய நினைக்கும் போதெல்லாம்,
உன் முகத்தை ம்ட்டுமே வரைகிறேன்,

அழகான சிலை வடிக்க நினைக்கும் போதெல்லாம்,
உன் உருவத்தை ம்ட்டுமே செதுக்குகிறேன்,

உணர்ச்சிகள் ஊனமான‌ என் இத‌ய‌த்தில்
எஞ்சி இருப்ப‌து உன் நினைவுக‌ள் ம‌ட்டுமே!

யாரோ அவள்!

love heart 

பேருந்தின் ஒர் இருக்கையில் அமர்ந்திருக்கிறாய் நீ,
உன் எதிரே நின்றுக்கொண்டு இருக்கிறேன் நான்.

தேவதையின் முகம் பார்த்ததில்லை நான்,
உன் முகம் காணும் வரை.

கண்டதும் காதல்‍ உடன்பாடில்லை எனக்கு
உன்னை காணும் வரை,
காரணம் உன் காந்த விழிகள்.

அக்கணம் முத‌ல், நான் பார்க்காத‌ போது நீயும்,
நீ பார்க்காத‌ போது நானும் ஒருவ‌ர் மீது ஒருவ‌ர்
ம‌ன்ம‌த‌ அம்பு துலைத்தோம்.

எதிர்பாராத‌ த‌ருண‌த்தில் உன் விழியும், என் விழியும்
நேருக்கு நேர் ம‌ன்ம‌த‌ போர் நட‌த்த‌, நாணத்தால்
இருவ‌ருமே, புன்ன‌கைத்தோம் செய்வ‌த‌றியாது.

அன்றுமுத‌ல் எனை நீயும், உனை நானும்
ர(நே)சிக்க ஆர‌ம்பித்தோம் மெளனித்த‌ப‌டியே.

சுகம்

 Happiness

தோல்வி கூட சுக‌ம்தான்
உன்னிடம் தோற்ப‌தென்றால்,
தோள் கொடுக்க‌ நீ இருந்தால்,

அழுவ‌து கூட சுக‌ம்தான்
என் கண்ணீராய் நீ இருந்தால்,
என் க‌ண் துடைக்க‌ நீ இருந்தால்,

ம‌ர‌ணம் கூட சுக‌ம்தான்
என் உயிராய் நீ இருந்தால்,
உன் ம‌டி மீது சொர்க்க‌ம் என்றால்,
எல்லாமே சுக‌ம்தான் என்னோடு நீ இருந்தால்.