நீ..நான்..காதல்

Sweet heart sree 

எனை தாக்கிய புயலும் நீ,
எனை தழுவிய தென்றலும் நீ.

எனை சூழ்ந்த சோகம் நீ,
சோக‌ம் தரும் சுக‌மும் நீ.

என் தேக‌ம் நீ,
தேக‌ம் தாங்கும் உயிரும் நீ.

உன் விழியால் எனை சுட்டெரித்த‌வ‌ளும் நீ,
பின் சுண்டியிழுத்த‌வ‌ளும் நீ.

என் காத‌ல் நீ,
காத‌ல் த‌ந்த‌ க‌விதையும் நீ.

என் காதல் மேகம் நீ,
மேகம் தரும் மழையாய் நீ.

ஜாடை பேசும் ஓடை நீ,
ஓடை தரும் குளிர் நீரும் நீ.

என் இதயத்தில் நீ,
என் இதயத்துடிப்பாய் நீ.

எனை கள்வனாக்கியதும் நீ,
கள்வனின் காதலியாய் நீ.

என் மனைவியும் நீ,
என் மழலையாய் நீ.

என் முதலும் நீ,
என் முடிவாய் நீ.

Advertisements

உயிரின் உயிரே!

Kids in love

என் மூச்சு அகலுமுன்னே உன்
முகம் கண்டிட‌ வேண்டும்.

மோக‌ம் கொள்ளும் உன் விழிக‌ளில்
நான் இமையாகிட‌ வேண்டும்.

அன்போடு நீ தீண்டும் தீண்ட‌ல்க‌ளில்
ம‌ர‌ண‌த்தை நான் மறந்திட‌வேண்டும்.

ம‌டிமீதும், இடைமீதும் விளையாடும்
சேயாக நான் மாறிட‌ வேண்டும்.

உன் இத‌ழில் மொத்த‌மாய்
முத்த‌ம் நூறு கொடுத்திட‌வேண்டும்.

உன் மார்போடு முகம் சாய்த்து
என் சோகம் சொல்லி
நான் அழுதிடவேண்டும்.

என்றுமே, என்ன‌வ‌ளாய் நீயிருக்க‌
வ‌ர‌ம் கோடி கேட்டிட‌வேண்டும்.

இல‌லையேல், உன் கால‌டிப‌டும்
ம‌ண்ணோடு ம‌ண்ணாக
நான் மாண்டிட ‌வேண்டும்.

ம‌ர‌ண‌மே என்னை ம‌ன்னித்துவிடு

ILU 

துரத்தும் உன் விழிகளால்
என் தூக்கம் தொலைந்ததடி,
நீ பிரிந்த துக்கமோ
தினம் எனை தூக்கிலிடுகிறது,
ம‌ர‌ண‌மோ எனை ம‌றும‌ண‌ம்
செய்ய‌ தூண்டுகிற‌து.

க‌ண்ம‌ணியே, உனை ச‌ந்திக்க‌
ஒரு வாய்ப்பு கொடு.
பிஞ்சு விர‌லால் எனை மெல்ல‌ தொடு,
உனை நேசிக்க‌ ஆணையிடு,
உன் அழகை ஆள‌விடு.

உன் இத‌ழ் மீது இருக்க‌விடு,
உன்னில் தொலைத்த‌ என்னை தேட‌விடு.
உன் ம‌டிமீது எனை மாய்த்துவிடு
அதுவ‌ரை, ம‌ர‌ண‌மே என்னை ம‌ன்னித்துவிடு.